Wednesday, October 30, 2013

மறந்திருக்க முடியுதில்லை
வஞ்சம் செய்து சென்றாய் என் நெஞ்சை
தூங்கும் போதும் செய்கிறாய் தொல்லை- இது
துயரமோ நான் அறிவேன் இல்லை

காலைச் சூரியன் கண்டால் உன்முகம்
சாலையோர பூவிலும் உன்முகம்
சாயங்கால வேளை வந்தும்
ஓயவில்லை உந்தன் ஞாபகம்

விழிகள் திறந்தால் எதிரில் தெரிவாய்
இதழ்கள் உரைக்கும் உன்பெயர் மெதுவாய்
வலிகள் நிறைந்ததே வாழ்வு என்று- உன்
வரவின்றி மனமும் ஏங்கிக் கொள்ளும்

இனியவன் பிரிவில் இன்முகம் சோரும்
இனியெப்போ தென உள்மனம் தேடும்
கனிமுகம் காண காதலில் சேர வருமொருநாளை
வரமாய் தேடும்

Wednesday, October 2, 2013

உனக்கான எனது
அழகிய கவிதை

எனக்கான பாதை
இதுவரை சரியாகத்தான் இருந்தது
எதிரே வந்தவன்
தடுமாறி மோதும் வரை…
காயம் எனக்கும் தான்

அவன் வார்த்தைகளில்
ஏதோ வசியம் வைத்திருக்க வேண்டும்
செல்லக் கொஞ்சலில்
கல்லும் கரைந்து தான் போகும்
நான் எம்மாத்திரம்
வசமானேன்..
வரமாகுமா…
சாபமாகுமா..?

உன் விதியின் பக்கங்களில்
என் பெயரும்
எங்கோ
எழுதி வைக்கப்பட்டிருக்கின்றது
காதலும் தான்…

வெற்றுக் காகிதம் ஒன்று
வெறுமையாய் கிடக்க
நீ வந்து கிறுக்கி சென்றாய்
அழகாய்……..

Tuesday, October 1, 2013

வேண்டாம் எனச் சொல்லும்
அறிவை
தூரத்தள்ளி
இல்லை.. நீதான் வேண்டும் என
அடம்பிடிக்கின்றது
மனசு….

நிலவே
என்னுடனேயே இரு
நினைவுகள் தந்து
எனை நீங்கிச் செல்பவனை
நினைத்திருக்கின்றேன்
நிலவே நீ என்னுடனே இரு
பிரியாதே

விட்டுவிடு



என் கண்ணெட்டும் தூரத்தில் அவள்
மனச் சிறகு விரித்து…
மகிழ்ச்சிக் கடலில்…
காத்திருக்கும் என்னை…
யோசிக்கவில்லை போலும்- நீ
யாசித்தாய்…
உனக்கும் தான் கொள்ளைப்பிரியம்
அவளில்..
தொட்டுவிட நினைக்கின்றாய்
எட்டிப்போகின்றாள்…
விட்டுவிடுவதாயில்லை நீ
மாய வலை விரித்து
காயம் செய்து…
சட்டென்று அவளை தொட்டுவிட்டாய்…
முதலில் அச்சம்..
அப்புறம் மிச்சமென்ன…
மறுபடியும் உன் தொடுகையில்
மறந்தாள் அவள் தன்னை …
சம்மதம் கிடைத்து விட்ட
வெற்றிக் களிப்பு உனக்கு…
அவளை உனக்குள் இழுத்து
உன்னுள் வீழ்த்தி
கட்டிப்புரட்டி கலவி செய்கிறாய்…
முடியவில்லை…
என்னினிய அலையே …
வேண்டாம் அவளை விட்டுவிடு
அவள் என்னவள்…